என் நண்பர் (வயதில் பெரியவர்) திரு . வேங்கடேசன் . எங்க ஊர் திராவிடர் கழகத்துல முக்கிய உறுப்பினரா இருந்தாரு. கழகத்தின் மன்ற குழுவில் கூட்டங்களில் பேசுபவர் . சொந்தமா மூணு கார் வெச்சி வாடகைக்கு விடுபவர். தொழில் ரீதியா பழக்கம்ங்கிறதால அடிக்கடி வருவார்.
அவருக்கும் எனக்குமான பழக்கமும் நூலக வட்டத்தில் இருந்துதான் துவக்கம்.. பலமுறை பேசியிருக்கிறோம் பல விசயங்களையும் பேசியிருக்கிறோம்.. என்னை பகுத்தறிவு கூட்டத்தில் ஒருவனாக மாற்ற மிகவும் பாடுபடுவார்.. நிறைய பெரியாரிய சிந்தனைகள் கொள்கைகள் என விளக்கமாக பேசுவோம் . அடிக்கடி விவாதங்கள் முற்றி சண்டையாக மாறிவிடும் ஆனாலும் அடுத்த நிமிடமே வாய்யா டீ சாப்டு வரலாம் என்பார்..
கறுப்பர் கூட்டம் வலையொளி பக்கமே அவர் வாயிலாக தான் எனக்கு பரிச்சயம். என்னிடம் கடவுளை எதிர்த்து பேசுவதில் அவருக்கு அலாதி பிரியம். அதற்காக பலமுறை சண்டையும் வரும்.. ஆனால் 7 மாதங்களுக்கு மேல் இருக்கும் ஆரம்பத்தில் நானும் அவர் காட்ட காட்ட கறுப்பர் கூட்டம் சேனலுக்கு ரசிகனாக மாறினேன்.. அப்போது தான் அவர் ராமாயணத்தின் ஆபாச புராணம் என்ற வீடியோவை காட்டினார். அதன் பிறகு அதை பற்றி விவாதிப்போம் இப்படியாக பல நாட்கள் போனது..
கந்த சஷ்டி வீடியோ வந்ததும் நேராக என்னை தேடியே வந்துவிட்டார். அத்தனை குஷி அவருக்கு. அன்று அவருடன் நான் விவாதிக்கவே இல்லை அந்த அளவு வருத்தப்பட்டேன்..
சென்ற வாரம் மீண்டும் வந்தார் . அவரே சேனலின் விவகாரத்தை பேச அன்று அவர் சொன்னார் இப்பவாவது கடவுள் இல்லை னு ஒத்துக்குறியா என்று கேட்டார்.. இனிமேலயும் கந்த புராணம் எல்லாம் நம்பாத என்றார்.
விவாதத்தில் இடையில் நெடுநேரம் நான் அமைதியாய் இருந்ததை பார்த்து . சரி பையன் பீல் ஆகிட்டான்னு நினைச்சு சரி சரி விடு எல்லாம் வெறும் கதைதான என்றார்..
ஆமாம் அண்ணா. கந்தபுராணம் வெறும் கதைதான். ஆனாலும் நான் முருகனை நம்புறேன் .
என்ன நான் இவ்ளோ சொல்றேன் இப்படி முட்டாள் தனமா நம்புறேன்னு சொல்ற..
நம்பிக்கை எப்பவுமே முட்டாள்தனம் இல்லசார். அத முதல்ல புரிஞ்சிக்கோங்க எல்லா விசயத்தையும் அறிவாவே பாக்க முடியாது . என்று வெளியில் சொல்லமுடியாத சில உதாரணங்களை சொன்னேன்.
(உங்களுக்காக ஒரு உதாரணம்.. இந்த பூமி பாதுகாப்பானது னு நம்பிக்கை தான் இந்த நிமிசமும் நம்ம வாழ்க்கைய சந்தோஷமா இருக்க வைக்குது. அறிவியல் படி பாருங்கள் பூமி எத்தனை ஆபத்தானது என்று. இந்த நொடி பூகம்பம் வந்தால்? வராதுங்கிற நம்பிக்கை தான வாழ்க்கைய அனுபவிக்க முடியுது )
இந்த நம்பிக்கைக்கு ஒரு காரணம் கூட வேணாமா டா?. ஒரு சின்ன காரணம் இல்லாம இருக்குற நம்பிக்கை கூட தப்பு தான.
சரி காரணம் தான வேணும் கறுப்பர் கூட்டம் கதையும் ஒரு கந்தபுராணம் தான் இப்ப நான் முருகன நம்பலாம் இல்ல..
எப்படி சொல்ற?.
சொன்னா நீங்க ஒத்துக்க மாட்டீங்க.. இருந்தாலும் ஒரு விளக்கமா சொல்றேன்..
கந்தபுராண கதைப்படி கொஞ்சம் சொல்றேன் . தேவர்கள் ஒருமுறை ஒரு தப்பு பண்றாங்க அதுக்கு தண்டனை தரேன்னு சிவன் என்ன பண்ணாரு சூரனுக்கு அந்த ராஜ்ஜியத்த தராரு . சூரனும் ஒழுங்காதான் இருந்தான். பின்னால அவன் அட்டகாசம் அதிகம் ஆகுது. பிரம்மாவ நோண்டுறான் விஷ்ணுவ அவமானபடுத்துறான் கடைசியா சிவனையே எதிர்க்க நினைக்குறான் அப்ப முருகன் வரான். சூரன அடையாளமே இல்லாம பண்றான் இதுதான கதை..
இங்க மதத்துல சில தப்புங்க நடக்குது கறுப்பர் கூட்டம் ஒரு கொள்கைல வருது . அந்த கொள்கைய பாத்த மதத்துல சிலர் அவங்க வளரவிடுறாங்க.. ஆரம்பத்துல இந்த விபூதி எடுக்குறது மாதிரி மேஜிக் விசயங்கள் போலி காட்டி ஒரு கோட்டைய உருவாக்குறாங்க.. இந்த கோட்டை வந்ததும் அட்டகாசம் தொடங்குது. ஆபாச புராணத்துல பிரம்மாவ செஞ்சிடுறாங்க.. அப்புறம் விஷ்ணுக்கு ராமாயணத்துல வர புத்திரகாம யாகத்தையும் அசுவமேதயாகத்தையும் போட்டு குழப்பிக்கிட்டு காரணமே இல்லாம அசிங்கபடுத்துனாங்க அத பத்தி நாம ஏற்கனவே பேசுனோம். ஒருநாள் கந்தபுராணம்னு சிவனயே செஞ்சாங்க. இவங்க நல்ல நேரம் அதுல சிக்கல் வருல வந்தா மொத்த இந்தியாவும் சேர்ந்து அடிக்கும்.. ஆனா திரும்ப இவங்க முருகன் மேல சஷ்டி கவசத்துல கைவெக்கிறாங்க.. ஓரிஜனல்ல வரமாதிரி கொஞ்சம் டைம் குடுத்தான் கேக்கல. இப்ப கறுப்பர் கூட்டமே இல்ல..
அந்த கந்தபுராணம் பொய்யா இருக்கலாம் இந்த கந்த புராணத்துக்கு நீங்களே சாட்சி . இப்ப நான் முருகன நம்பலாம் இல்ல..
உன் பார்வை தப்புப்பா .
நான் தான் சொன்னனே ஒத்துக்க மாட்டடீங்கன்னு.. அதென்ன திடீர்னு டா போய் யா போய் அப்ப அப்பா வருது..
அப்போதும் டீ சாப்டுட்டு ஊர்சுத்த போனோம்.. இப்ப யார் பகுத்தறிவுக்காரங்கன்னு அவருக்கும் எனக்குமே குழப்பம் வந்துருச்சி..
Post a Comment