பிரபஞ்சமும் வாழ்க்கையும்

கே ாரா தளத்தில் நண்பர் திரு ரமேஷ் G அவர்கள் எனக்கு பகிர்ந்தகேள்வியின் பதிலாக 

கேள்வி :
வாழ்கைக்கு உபயே ாகமான கதைகள் கூற முடியுமா?

பதில்+கதை
தாராளமாக.. நமக்கு நன்கு தெரிந்த பிரபஞ்சத்தை வைத்தே இந்த கதையை துவக்குகின்றேன்.. 

பிரபஞ்சம் எங்கும் ஏதுமற்ற வெட்டவெளிதான் இருக்கிறது.. ஆங்காங்கே சில மண்டலங்கள் இருக்கின்றன.. இந்த மண்டலங்களில் நட்சத்திரங்களும் , சூரியன்களும் ,கோள்களும்,  விண்கற்களும் உள்ளன.. 

அதே போல்தான் வாழ்க்கையும் மனிதர்கள் என்றவர்கள் இல்லாமல் வாழ்க்கை வெட்டவெளிபோல் பயனற்றதாகிவிடும் .. இந்த வெட்டவெளியினில் மனிதர்களை நிரப்பும் போது அது ஒரு அர்த்தமுள்ள நடைமுறையாகிறது.. இங்கே மண்டலங்களாக சமுதாயத்தை பார்ப்போம். அதனுள் குடும்பம் , உறவினர்கள் , நண்பர்கள் , அலுவலகம் , மற்றும் இதர மனிதர்கள் இருக்கின்றனர்.. 
நம் வாழ்க்கையில் நமக்கொரு இலக்கு அல்லது செயலை நாம் வகுத்திருப்போம். அதனை சூரியனாக கொண்டு அதனையே சுற்றி வருவோம்.  அவ்வப்போது நாம் கண்டுவியக்கும் மனிதர்கள் நட்சத்திரங்களாய் மிளிர்வர்.. நண்பர்களும் உறவினர்களும் மற்ற இதர கோள்களை போல அதாவது நம்மை போலவே சுற்றிவருவர்.. சமுதாயத்தின் நம்முடன் தொடர்பில்லாத மற்ற மனிதர்கள் விண்கற்களை போல திரிவர்.. 
இப்படியாக தான் பிரபஞ்சமும் வாழ்க்கையும் ஒன்றுபோல இருக்கிறது.. இங்கிருந்து சில உன்னிப்பானவற்றை காண்போம்.. 
வாழ்க்கையின் இலக்கு நம்மோடு தொடர்புடையவர்கள் அனைவருக்கும் ஒன்றாகவே இருக்கும்… சூரியனை நமது கோள்கள் சுற்றுவது போல 
ஆனால் அவரவர் நிலையை பொறுத்து  காலமும் வாய்ப்பும் மாறுபடும் . பூமியில் உள்ள வசதிகள் செவ்வாயில் இருக்காது ஆனால் பூமியைவிட செவ்வாயினால் சூரியனை சீக்கிரம் சுற்றிவர முடியும்.. இதற்காக நாம் பொறாமை படக்கூடாது ..


நம் கண்களுக்கு நட்சத்திரமாக மின்னும் நபர்களால் நாம் ஈர்க்கப்படுவது உண்மை ஆனால் ஈர்ப்பின் விளைவு நம்மை நாம் தக்கவைத்துக் கொள்வதா? இல்லை இலக்கிலிருந்து விலகிப் போவதா? என்பதில்  இருக்கிறது .. அதாவது பூமியானது நட்சத்திரத்தால் ஈர்க்கப்படலாம் ஆனால் ஈர்ப்பில் பூமி மயங்கிவிட்டால் சூரிய சுற்றிலிருந்தே விலகிப்போய்விடும்.
நாம் நம் இலக்கில் சரியாக செயல்பட்டாலும் வெளியிலிருந்துசில தடைகள் பாதிபபுகள் வரும் அதையும் தாங்கி நாம் நம் இலக்கில் செல்லவேண்டும்… அதாவது அவ்வப்போது பூமியை தாக்கும் விண்கற்கள் போல.. 

இறுதியாக ஒரு பெரும் பிரச்சனை உள்ளது தவறான ஆற்றல்மிக்க ஒரு செயல் நம் அருகில் வந்தாலோ நாமே நெருங்கினாலோ  நம் இலக்கு மட்டுமல்ல.நாமே தொலைந்து போவோம் . ஒரு கருந்துளை போல.. 

இத்தனையோடும் போராடி தன்னை தக்க வைக்கும் தகுதி உள்ளதால் தான் நம் பூமி நிம்மதியாக உலாவருகிறது.. அதுபோலவே வாழ்வில் நம் தகுதியை வளர்த்துக் கொண்டால் ஆனந்தமாக பீடுநடையோடு உலாவரலாம்..  

என் சொந்த கற்பனை பிழைகள் இருப்பின் மன்னிக்கவும் (கருத்தில் தெரிவித்தால் திருத்திக் கொள்வேன்) கேள்விக்கு மிக்க நன்றி.. 

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post