எது கவிதை?

சிக்கல் வந்தாதான் சிலது தோன்றுகிறது..

எது கவிதை? - இங்கே
எது கவிதை? - நாம்
எழுதுவதா கவிதை? - இல்லை
எழுதப்படுவதா கவிதை ? - இல்லையில்லை

வாசிப்பதா கவிதை? - அல்ல
அது மேடை பேச்சு - சப்த
வரிசையா கவிதை ? - இருக்கலாம்
சங்கம் ஒப்புக் கொள்கிறது..

நேரிடையாய் சொல்வதா கவிதை ? - இல்லை
அது வெறும் கருத்து - பின்னே
மறைமுகமாய் சொல்வதா கவிதை? - இல்லை
அது புரியாத புதிர்  - அப்போ
எது தான் கவிதை ?

வாவா என்று வார்த்தை கொட்டி
தாதா என தாளமும் தட்டி
ஆகா என அனைவரும் சொன்னால்
அதுவே கவிதை.. -இல்லை

பாரதியின் கவிதைபோல் இருக்கனுமோ? - இல்லை
அது நாகரிக நகல் போன்றது - சரி
நாலாயிரம் போல் இருக்கனுமோ - இல்லை
அது முழுமையாக ஏற்கலாகாது.. - போடா!
பழமொழி போல் இருக்கனுமோ - ஆகா

அது கூட பரவாயில்லை - அப்போ
அது தான் கவிதையா? - இல்லை
அட பின்ன எதுதான் கவிதை? - அப்படிகேள்.

கவிதை ஒரு கலை. - ஓ ஓவியமா?
ஓசையா? இசையா? ஆட்டமா? - இல்லை
சிற்பமா? கணிதமா? கூடலா? - இல்லையில்லை
அட என்னடா வம்பா போச்சி - அடேய்
என்னையும் சொல்லவிடு.. - சொல்லு!

கவிதை ஒரு சமையல் - அதற்குள்
சுவை இருக்கும் சூத்திரம் இருக்கும் - தகுந்த
காலமிருக்கும் கொஞ்சம் காரம் இருக்கும் - மேலாய்
அழகு இருக்கும் கொஞ்சம் சப்தம் இருக்கும் - வாகாய்
உவமை இருக்கும் அதற்கோர் உருவகம் இருக்கும் - ஆகா
என உடம்பு சிலிர்க்கும் ஒரு உணர்வு இருக்கும் - நல்ல
பாட்டாய் இருக்கும் அல்லது பாதி மடிக்கும். - வந்த
கருத்தை புகுத்தி குழைத்த கவிதை சமையல்..

புரியலயே சொல்லு வேறமாதிரி - அடடேய்
கவிதை ஒரு காதலி - உன்னை
கலவி கொள்ளும் காதலி - அங்கே
எழிலும் இருக்கும் எழுச்சி இருக்கும் - பொங்கி
வழியும் உணர்வில் உவமை சிறக்கும் - தங்கும்
மடமை அழிக்கும் மனதை பறிக்கும் - உன்னில்
மகிமை புரியும் மருமம் நிறையும் - வடிவில்
நீட்சி இருக்கும் மடிப்பும் கிடக்கும் - வதனம்
மேடும் இருக்கும் பள்ளம் இருக்கும். - நல்ல
மேனியை போலே மோனை மினுக்கும் - அப்போ
ஏணியை தந்து எதுகை அழைக்கும் - நன்றாய்
கோளடா நண்பா கவிதையோர் காதலி..

இன்னும் புரியல எதுவும் விளங்கல.- சும்மா
இருக்கலாம் போலக் குழப்புற - எளிதா
சொல்லு இல்ல எட்டியே நில்லு..

ஒரு கருத்து வரும் அதப்போல ஒரு உவமை வரும்
உள்ளே எதுகையும் மோனையும் எழுந்து வரும்
சூழல் ஏற்றது போல் உருவமெடுக்கும்
ஆகா என புரட்சியும் செய்யும்.
அடடா என அழுகவும் செய்யும்
அம்மா என அணைக்கவும் செய்யும்
சும்மா உனை உசுப்பவும் செய்யும்..
அதுதான் கவிதை அதன் பேர் தான் கவிதை.

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post