சமூக வாழ்விற்கு தேவையான நற்குணங்களை வகைபடுத்தி பிறரை பற்றி பழி கூறாமை என்னும் நற்குணம் பற்றி விளக்குகிறார் பேராசான்.
181. அறங்கூறா னல்ல செயினும் ஒருவன்
புறங்கூறா னென்றல் இனிது.
உரை : அறம் பேசாதவர், தீமை செய்பவர் ஆனாலும் ஒருவர் பிறர் பற்றி புறம் பேசாமல் இருப்பான் என்றால் அது இனியது
182. அறனழீஇ யல்லவை செய்தலின் தீதே
புறனழீஇப் பொய்த்து நகை.
உரை : அறம் பேசாது தீமை செய்வதை விட தீயது ஒருவரை பழித்து பேசி அவர்முன் பொய்யாக சிரிப்பது..
183. புறங்கூறிப் பொய்த்துயிர் வாழ்தலிற் சாதல்
அறங்கூறும் ஆக்கந் தரும்.
உரை : பொய்யாக பழி சொல்லி வாழ்வதை விட சாவது ஆவது அறம் பேசிய நம்மை தரும்
184. கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க
முன்னின்று பின்னோக்காச் சொல்.
உரை : முகத்துக்கு முன் முகம் பாராமல் திட்டினாலும் திட்டுக . அவர் இல்லா இடத்து பழி பேச வேண்டாம்.
185. அறஞ்சொல்லும் நெஞ்சத்தான் அன்மை புறஞ்சொல்லும்
புன்மையாற் காணப் படும்.
உரை : அறம் பெரிதாய் பேசுபவன் அத்தன்மை இல்லாதது அவன் புறம் பேசுதலில் தெரிந்துவிடும்.
186. பிறன்பழி கூறுவான் தன்பழி யுள்ளுந்
திறன்தெரிந்து கூறப் படும்.
உரை : ஒருவன் இல்லா இடத்து அவனை பழித்து பேசுபவனை அவனில்லாத போது பிறர் பழித்து பேசுவர்.
187. பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி
நட்பாடல் தேற்றா தவர்.
உரை : இன்புற பேசி நட்பு செய்ய தெரியாதவர் புறம் பேசி உறவினரையும் பிரித்து விடுவர்
188. துன்னியார் குற்றமுந் தூற்றும் மரபினர்
என்னைகொல் ஏதிலார் மாட்டு.
உரை: பழகுனவனையே இப்படி புறம் பேசுபவன் பழக்கமில்லாத நம்மை எப்படி பேசுவான்.
189. அறனோக்கி யாற்றுங்கொல் வையம் புறனோக்கிப்
புன்சொ லுரைப்பான் பொறை.
உரை : ஒருவர் இல்லாத இடத்தில் அவரை பொய்யாக பழி பேசுபவனை தலையெழுத்தே என்று தான் இன்னும் பூமிசுமக்குதோ?. ச்ச பேராசான் கவிஞன்யா.
190. ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னு முயிர்க்கு.
Post a Comment