இல்லறவியல் - விருந்தோம்பல்

உலகின் தலையாய குணப்பாடுகளில் ஒன்று விருந்தோம்பல் அதிலும் தமிழ்குடிக்கே பெரிய சிறப்பாக இருக்கும் விருந்தோம்பலை தமிழின் திலகமாய் விளங்கும் குறள் விளக்குகிறது. இங்கனம் வாழ்க்கை விருந்து பற்றி வகைபடுத்தி விளக்கம் தருகிறார் பேராசான் வள்ளுவப் பெருந்தகை..

81. இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
வேளாண்மை செய்தற் பொருட்டு.

உரை: இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு செல்வங்களை சேர்த்து காத்து வாழ்வது எல்லாம் விருந்தினருக்கு உதவுவதற்காகவே.

82. விருந்து புறத்ததாத் தானுண்டல் சாவா
மருந்தெனினும் வேண்டற்பாற் றன்று.

உரை: தான் உண்பது வாழ்வை காக்கும்  அமுதமே ஆனாலும் விருந்தினன் இல்லாமல்  உண்பது அறமல்ல.

83. வருவிருந்து வைகலும் ஓம்புவான் வாழ்க்கை
பருவந்து பாழ்படுதல் இன்று.

உரை\:| நாள்தோறும் வரும் விருந்தினனை காத்து உதவுவான் வாழ்வில் வறுமை வந்து வீண்பட மாட்டான்..

84. அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்.

உரை :  ஒருவன் விருந்தினனை நன்முறையில் முகமும் மனமும் மகிழ்ந்து பேணுவதை கண்டு திருமகள் என்னும் செல்வத்தின் தேவதை விரும்பி அவன் இல்லம் தங்குவாள்..

85. வித்தும் இடல்வேண்டும் கொல்லோ விருந்தோம்பி
மிச்சில் மிசைவான் புலம்.

உரை : விருந்தினனுக்கு படைத்து மிஞ்சியதை உண்பவனின் வயலில் அவன் சென்று தான் வித்து இடவேண்டுமா என்ன.? என்று அவன் விதைக்காமலே செல்வம் சேரும் என்கிறார்.

அதுக்காக வயலுக்கு போகாம இருக்காதீங்க.. அவன் புண்ணிய கணக்கு என்னும் வயல் செழிக்க தனியாக நல்ல விசயம் ஒன்று செய்ய வேண்டுமா  என்ன? என்று தான் வள்ளுவப்பெருந்தகை மொழிகிறார்.

86. செல்விருந்து ஓம்பி வருவிருந்து பார்த்திருப்பான்
நல்விருந்து வானத் தவர்க்கு.

உரை : உண்டு களித்து ஆசுவாசம் கொண்டு செல்கிற விருந்தினனை சிறப்பொடு வழியனுப்பி அடுத்து வரும் விருந்தினனுக்காக ஆவலாய் காத்திருப்பவன். வானுலக தேவர்களுக்கு நல்ல விருந்தனனாம்.

87. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.

உரை: விருந்து  தரும் துணையை துணைவியான மனைவியுடன்  மேற்கொண்ட வேள்விக்கு பயன் என்று இணையாக ஒன்று இல்லை.

88. பரிந்தோம்பிப் பற்றற்றேம் என்பர் விருந்தோம்பி
வேள்வி தலைப்படா தார்.

உரை : பாத்து பாத்து சேர்த்தும் கடனாதான் வந்து நிக்கிது என்று புலம்புவர் விருந்து படைக்கும் வேள்வி செய்யாதவர் ..

89. உடைமையுள் இன்மை விருந்தோம்பல் ஓம்பா
மடமை மடவார்கண் உண்டு.

உரை: செல்வம் இருந்தும் வறுமையில் தான் வாழும் முட்டாள்தனம் விருந்தோம்பல் செய்யா முட்டாள்களிடம்  உண்டு 

90. மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

உரை: நுகரந்திட வருந்தும் அனிச்ச மலர் அதுபோல முகம்மாறி பார்க்க வருந்தும் விருந்து..


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post