இல்லறவியல் - தீவினை அச்சம்

சமூக வாழ்வுக்கு தேவையான குணங்களை படியமைத்து விளக்குகிறார் பேராசான் . அவ்வரிசையில் தீவினைக்கு அஞ்சுதல்  என்ற குணத்தை விளக்கம் செய்கிறார். 


201. தீவினையார் அஞ்சார் விழுமியார் அஞ்சுவர்
தீவினை யென்னுஞ் செறுக்கு.

உரை: தீமை செய்ய முன்பே
           தீமை செய்தவர் பயப்படார்
          தீமை செய்யா நல்லோர் பயப்படுவார்


204. மறந்தும் பிறன்கேடு சூழற்க சூழின்
அறஞ்சூழுஞ் சூழ்ந்தவன் கேடு.

உரை: மற்றார்க்கு கேடுதரும் செயலை 
             மறந்தும் கருதாதீர் கருதினால்
             கருதுவார் கெட அறம் கருதும்
 
மத்தவனுக்கு கேடு வர நெனைச்சா அவனுக்கு கேடு வர அறம் நினைக்கும். 


205. இலனென்று தீயவை செய்யற்க செய்யின்
இலனாகும் மற்றுப் பெயர்த்து.

உரை: இல்லாத ஒன்றை பெறுவதற்கு தீமை செய்யாதீர் . செய்தால் இருப்பதும் பிய்த்துக் கொண்டு போய்விடும். 


206. தீப்பால தான்பிறர்கண் செய்யற்க நோய்ப்பால
தன்னை அடல்வேண்டா தான்.

உரை : நோய்பட்டு அழிய விரும்பாதவன் பிறர்க்கு தீமை செய்ய மாட்டான். 


207. எனைப்பகை யுற்றாரும் உய்வர் வினைப்பகை
வீயாது பின்சென் றடும்.

உரை : எந்த பகை பெற்றாலும் தப்பலாம் தீமையால் வந்த  கர்மவினைப் பகையில் தப்ப முடியாது. 

208. தீயவை செய்தார் கெடுதல் நிழல்தன்னை
வீயா தடியுறைந் தற்று.

உரை: பிறரை இருளில் தள்ளும் தீமை செய்யாதீர் அந்த இருளில் உங்கள் காலடியில் நிழலாக இருக்கிறது . 



209. தன்னைத்தான் காதல னாயின் எனைத்தொன்றுந்
துன்னற்க தீவினைப் பால்.

உரை : உங்களை நீங்களே காதல் செய்ய வேண்டுமானால் எப்போதும் தீமையின் அருகில் கூட செல்லாதீர். 



210. அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.

உரை : தீமையுள் திரிந்தும் தீமை செய்யாது வாழ்பவன் தான் கேடு இல்லாதவன் 

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post