இல்லறவியல் - இல்வாழ்க்கை

இல்வாழ்க்கை என்னும் அதிகாரத்தால் பேராசான் இல்லற வாழ்வின் கடமையும்  அறத்தையும் நமக்கு விளக்குகிறார்.

41. இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

உரை : இல்லற வாழ்வு வாழ்பவன் என்பவன் கற்கும் பிரமச்சரிய ஒழுக்கம் பேணுபவர். குடும்பம் விட்டு மனைவியுடன் யாத்திரை செல்லும் வானபிரஸ்தர். முற்றும் துறந்த துறவி ஆகிய மூவர்க்கும் நல்லாற்றல் என்னும் வகையான உணவு உடை இருப்பிடம் போன்றவற்றை தரும் துணையானவாக இருக்க வேண்டும்.

42. துறந்தார்க்கும் துவ்வா தவர்க்கும் இறந்தார்க்கும்
இல்வாழ்வான் என்பான் துணை.

உரை : துறவிக்கும் வரியவர்க்கும் துணையில்லா அநாதையர்க்கும் இல்வாழ்க்கை வாழ்பவன் துணை செய்ய வேண்டும்.

43. தென்புலத்தார் தெய்வம் விருந்தோக்கல் தானென்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை.

உரை : முன்னோர்கள் தேவர் விருந்தினர் உறவினர் என ஐவரையும் ஒன்றி காத்தல் இல்வாழ்வானின் தலையாய கடமை

44. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல்.

உரை : தீய பழிக்கு அஞ்சி  நல்வழியில் பொருள் சேர்த்து உறவினரோடு (துறவி ,மாணவர்,வானபிரஸ்தர் , விருந்தினர்,உறவினர் ) பகுத்து உண்ணும் குணமுடைய இல்லறத்தான் பண்பினால் உலகம் அவன் பின் வரும் ..

45. அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

உரை : மனையிடத்தும் உறவினர் இடத்தும் அன்பும் . அறவழி நடத்தலும் உடையவராக இருப்பின் இல்லற வாழ்க்கை பண்பும் பயனுமாக அமையும்.

46. அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஒய்ப் பெறுவ தெவன்?

உரை : அறத்தோடு இல்லற வாழ்க்கை வாழ்வதை விட மற்ற செயல்கள் போய் சிறப்பும் நற்பயனும் பெறுவது எவர்..

47. இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை.

உரை: இல்லறத்திற்கு உரிய இயல்புகளோடு வாழ்பவன் தவம் மேற்கொள்ளும் முயற்சி செய்வாருக்கு எல்லாம் தலையாய சிறப்பொடு இருப்பான்.

48. ஆற்றின் ஒழுக்கி அறனிழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.

உரை : மற்றவரையும் அறவழியில் நடக்க வைத்து தானும் அறவழியில் நடப்பான் என்றால் அவன் பற்பல தவங்கள் செய்த முனிவர்களுக்கு இணையாவான்.

49. அறன் எனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப தில்லாயின் நன்று.

உரை : அறம் என்பதே இல்வாழ்க்கை தான் துறவோ பிறர் பழிக்கு உள்ளாவாது இருப்பது நல்லது..

50. வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.

உரை : உலகில் அறவழியால வந்த பெருமையும் புகழும் மதிப்பும் பெற்று சிறந்து வாழ்பவன் வானில் வாழ்கிற தெய்வங்களில் ஒன்றாக கருதப்படுவான்.. 



Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post