இந்த ஒரு அதிகாரம் மட்டும். கொஞ்சம் லோக்கல் ஸ்லாங்க்ல எழுதலாம்னு நெனைக்குறேன் நல்லாயிருக்கு.. அதுக்காக ஆசான தப்பா எடுத்துக்காதீங்க . சார் பெத்த கை..
ஊரோட வாழுறதுல இருக்குற சிக்கலுக்கு பதிலு சொல்றாப்படி வாத்யாரு. வள்ளுவரு.. இங்கன பிரயோசன மில்லாம பேசாதங்கிறாரு.
191. பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்.
உரை : கேட்குற ஆள் வெறுக்குற மாறி வெட்டியா பேசுற ஆள . எல்லாரும் கேவலமா சிரிப்பாக .
192. பயனில பல்லார்முன் சொல்லல் நயனில
நட்டார்கட் செய்தலிற் றீது.
உரை : பல பேருக்கு முன்னால வெட்டி பேச்சு பேசுறதுங்கிறது . நண்பருங்க கிட்ட அறம் இல்லாத நல்லா இல்லாதத செய்றது மாறிங்க.
193. நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை.
உரை: வேண்டாதத பேசினு இருக்குறது அவன் யோக்கியன் இல்லப்பானு சொல்லிடும்பா.
194. நயன்சாரா நன்மையின் நீக்கும் பயன்சாராப்
பண்பில்சொல் பல்லா ரகத்து.
உரை : காரியம் இல்லாம பேசுறது நல்ல குணமில்லயாம் மக்காள்.
195. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில
நீர்மை யுடையார் சொலின்.
உரை : காரியமில்லாம வெட்டி பேச்சு பேசுனா பேரும் பெருமையும் போயிடுமாமே.
196. பயனில்சொல் பாராட்டு வானை மகனெனல்
மக்கட் பதடி யெனல்.
உரை : ஒன்னுத்துக்கும் ஆவாதத எப்பவும் பேசுறவன மனுசன பாக்காத. பயிர் இல்லத பதருதான் அந்தாளு.
197. நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.
உரை : கெட்டதயே சொன்னாலும் பரவாயில்ல பெருசுங்க வெட்டியா பேசாம இருக்குறது நல்லது பாஸ்.
198. அரும்பய னாயும் அறிவினார் சொல்லார்
பெரும்பய னில்லாத சொல்.
உரை : நல்லதே நடக்கும்னாலும் அறிவாளி பிரயோசனமில்லாம பேசமாட்டான்
199. பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.
உரை : தேவையில்லாத வார்த்தைய ஞானி மறந்தும் சொல்ல மாட்டானாம் பா.
200. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.
உரை : சொல்லுலயே பயன்தரக் கூடியத மட்டும் சொல்லுங்க. மத்தத சொல்லாதீங்க.
வாசகர் விருப்பத்தால் உன்னத இலக்கியத்தை ஊர்மொழிக்கு இழுத்து விட்டேன் பெரியோர்கள் தயை பொருத்து மன்னித்து அருள்க.
Post a Comment