உள்ளத்தால் புரிந்து உணர்வால் இணைந்தோம் நாமே
கள்ளமிலா சிரிப்பில் கடவுளை கண்டோம் நாமே.
வலியினில் விழிசிந்தி வர்ணனையில் வாழ்வெய்தி
வருத்தம் மறந்துகலி விருத்தம் படைத்தோம்
உளிகளாய் வார்த்தை உருவகித்து ரசித்தோம்.
கருத்தும் திருத்தும் கவிப்போம் களிப்போம்.
அண்டை தேசத்தின் அழுகுரலுக்கு முதற்குரல் நாமே
அண்டம் விரித்து அமுதைக் கடைந்தோர் நாமே
அகிலம் போற்றியென்ன அவைதான் தூற்றியென்ன
அன்னை தமிழ்நமக்கு அன்பு காட்டுமே
தரணியை வென்று சரணடை வதிலென்ன லாபம்
பரணியும் பாடியே பெறும்புகழ் தன்னிலென்ன தர்மம்.
கட்டிலறையோ சமையலறையோ கட்டிடத்திற்கு பேதமா
புட்டிபாலுக்கும் போதைகள்ளுக்கும் புலவனிடத்தில் பேதமா
காதலா களமோ கவிதைசெய் கர்மம்
ஆதலால் கவிஞனே ஆற்றலை அழி
மாதவிடாயை சாக்கடையை மாத்திமாத்தி வை
மாசில்லா மலமும் மாய்ந்துமாய்ந்து வை.
ஆகாவென்னும் கூட்டத்தில் ஆகசிறந்த கவிஞன்நீ.
ஆசைமொழிக்கு உன்னால் ஆனகொலை கவிஞன்நீ..
பூசைக்கான வரியில் பூவாசமலம் என்பாய்.. மன்னிக்கனும் மலரென மாற்றுவாய்..
தேககாமத்தில் நீயுமே தேவையற்றவை சேர்ப்பாயோ?.
படி ரசி தேடி லயித்து பின் எழுது
பிடி புசி கோடி ரசனை பின் எழுது.
மடி வசி நாடி வந்த வாசகன் கவிக்குமே
பிடியாய் நீவைப்பாய் வித்து ...
யாருக்கும் உண்டு யாவிலும் துன்பம்
போருக்கும் தேவை தேர்தான் மறவாதே.
கம்பனும் பாரதியும் கன்னிதமிழ் பல்புலவரும்
தந்த ரசனையே நம்முள் கவிகின்றது.
எஞ்சுவது நீரும்நானும் எதிர்கால நற்கவிக்கு
கொஞ்சு தமிழ்தன் கொற்றமும் கசிதலும்
மிஞ்சி நீளுநம் மிளையோர்க்கு தருவதே சொத்து...
Post a Comment