ஓர் கொடிய நாற்றம்

#psycholic_darked_poems

ஓர் கொடிய நாற்றம்
பெரும் இருளின் தனிமை
கால் பதிக்க புதையும் மண்
தனிமை தனிமை படபடக்கும் இதயம்

ஓர் கொடிய நாற்றம்
மூச்சுக் குழலின் தடுமாற்றம்
காற்றுக்குள்ளே கலப்படம்
வியர்வைகளில் சில்லிட்ட உடம்பு

ஓர் கொடிய நாற்றம்
தூரம் சென்றும் குறையாத நாற்றம்
மன்னிக்கவும் நெருங்கி வந்துள்ளோம்
கால்களில் சேற்றின் அரிப்பு

ஓர் கொடிய நாற்றம்
இப்போது இன்னும் அதிகமாய் வீசுகிறது
இப்போது நுரையீரல் முழுதும் நிரம்பியுள்ளது
சேற்றின் சாக்கடை நாற்றம்வேறு..

ஓர் கொடிய நாற்றம்
கண் தெரியும் தொலைவில் புகைகிறது
ஆர்வம் இழுக்கிறது பயம் தடுக்கிறது
நாற்றம் பிடுங்குகிறது சேற்றில் கால் புதைகிறது..

ஓர் கொடிய நாற்றம்
வெளியேற மூளை சொல்கிறது வழியெங்கே
புகைகிறது ஒன்று நெருங்குகிறோம் வாருங்கள்
புகைசூழ்ந்து நாற்றத்தை பெருக்கியது

ஓர் கொடிய நாற்றம்
புகையினில் கண்மறைத்து நாற்றம் நிறைந்தது
நடந்து நடந்து வியர்த்து குளிர்ந்தது
குளிரில் புகையின் உஷ்ணம்  இதமளித்தது..

எனினும் ஓர்  கொடிய நாற்றம்
மெல்ல புகைவது என்னவென்று பார்க்க...
வேண்டாம் இங்கேயே நில்லுங்கள் எரிவது
உங்களின் ஒருபிணமாக மட்டும் இருக்கட்டும்..


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post