ஓரிருநாள் தாண்டி உடல்நலம் பெற்று மீண்டும் தன் பணிக்கு வந்தார் முத்துசாமி சாப்பாடு குடுத்துவிட்டு மகன் சிலநிமிடம் இருந்தான். அவனை தைரியப்படுத்தி அனுப்பி வைத்துவிட்டு தன் அறையில் அமர்ந்திருந்தார் முத்துசாமி. மணி பதினொன்றை எட்டியது. உடல்சோர்வாலும் சாப்பிட்ட கிறக்கத்தாலும் மெள்ள கண்ணசந்தார்..
கண்மூடிக் கிடந்தவர் நினைவில் தன் பின்னால் இருக்கும் ஜன்னலில் யாரோ எட்டிப் பார்ப்பது போலத் தோன்ற சட்டென திரும்பியவர் சில நிமிடம் அச்சத்தால் உறைந்து நின்றார் இன்னது என்று வரையறுக்க முடியாத ஒரு பெண்முகம் கலைத்த கூந்தல் கடுமையான அணிகலன்கள் ஆங்காங்கே ரத்தத்திட்டுக்கள் என ஏதோ ஒரு அச்சமூட்டும் உருவமாகவே இருந்தது. இது மெல்ல திரும்பி அப்பார்ட்மெண்டை நோக்கி நகர்ந்தது..
அச்சத்தின் உச்சத்தில் நடுநடுங்கியபடி இருந்தவருக்கு மூளைக்குள்ளே பட்டாசு வெடிப்பது போன்ற உணர்வு எழ தன்னை அறியாமல் மயங்கிவிட சில நிமிடங்கள் கழிந்தன . யாரோ எழுப்பியது போன்றதும் எழுந்து வேகமாக அந்த 27ம் அப்பார்ட்மெண்ட் வீட்டை நோக்கி ஓடினார். காரணம் மற்றொரு பெண்ணை மறைத்து வைத்திருந்தார்..
அந்த கதவை திறந்தவர் நேரடியாக அந்த இரண்டாம் அறையை திறக்க சென்றார் ஆனால் அதற்கு முன் அறை திறந்திருந்தது.. பக் என்று இருந்தது அவருக்கு. நெஞ்சுக்கூட்டில் இடிஇடிக்க பயம் மேலிட்டாலும் ஒரு தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கூப்பிட்டார் . ஏ புள்ள எங்கயிருக்க வந்துரு..
ஒரு பெண் சரியான ஆடைகளின்றி மெள்ள மெள்ள வந்தாள் அவளது நடையில் இருந்த குறை கூட இவரை சாந்தப்படுத்தவில்லை வலதுகாலையும் உடைக்க முயன்றார். அந்த நிமிசம். அந்த இருளறையில் பெருமளவு ரத்தவாடையும். புகையும் சிவப்பு வெளிச்சமும் வந்து அவரை பயமுறுத்த தடக்கென சப்தம் கேட்டு திரும்பியவர். பார்த்து விட்டார் பார்த்தே விட்டார் .
கரிய உருவமும் உடலெல்லாம் ரத்தமும்
ஆடையில்லா உடலை கூந்தலே மறைத்திருக்க கையில் ஒரு கட்டையும் ஆக்ரோசமும் ஆவேசமும் பீறிட அனலாய் சுவாசித்துக் கிடக்கும் ஒரு பெண்ணை. மார்புக்கூட்டில் இடிக்கும் இடியின் வலிதாங்காமல் அங்கேயே அம்மா காளி… என்று கூவியபடி மயங்கி விழுந்துவிட்டார்..
மறுநாள் விடிந்தபின்பு அவர் அந்த 27 ம் நம்பர் வீட்டின் முன்புறம் இருக்கும் படிக்கட்டுக்களில் விழுந்து கிடப்பதை கண்ட சில அப்பார்ட்மெண்ட் வாசிகள் அவரை மருத்துவமனையில் சேர்த்துவிட்டு அவரது குடும்பத்திற்கும் தகவல் சொல்லிவிட்டு அவரவர் வேலையாக சென்றுவிட்டனர். வந்தவரில் ஒருவனான நிரஞ்சன் மட்டும் முத்துசாமியின் குடும்பத்திலிருந்து யாராவது வரும்வரையில் காத்திருப்பது என்று திட்டவட்டமாய் நின்றுவிட்டான். பொதுவாகவே இளகிய மனம் கொண் நிரஞ்சன் எல்லோருக்கும் உதவுபவன் என்றாலும் இங்கு சிறப்புக் காரணம் பலமுறை முத்துசாமி இவனுக்கு உதவியிருக்கிறார் நல்ல நட்பாக பழகுகிறார் . இத்தனைக்கும் நிரஞ்சன் பயந்த சுபாவம் உள்ளவன் தான்.
மயக்கத்திலிருந்து மீண்ட முத்துசாமி ஆவென பயத்தில் அலற மூச்சுத் திணற அதற்குள் வந்த மருத்துவர் ஒரு ஊசி போட்டு தூங்கவைக்க . அதற்குள் அவர் பயத்தில் நான் பாத்தேன் அந்த வீட்டுல பாத்தேன்னு உளறியதை கவனித்துவிட்டான் நிரஞ்சன் .
மெதுவாக அங்கிருந்து விலகிச் சென்றவன் . சில தெருக்கள் தாண்டி அங்குள்ள தபால் நிலையத்தில் சென்று தன் பெயர் முகவரி இட்டு இங்கிருந்து இருநூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பராகிராமம் என்கிற ஊரில் உள்ள காந்தனுக்கு நடந்தவற்றை கடிதமாக எழுதி அனுப்புகிறான். சென்றமுறை காந்தன் வந்து விசாரித்துப் போனபோது ஏதாவது தகவல் கிடைத்தால் சொல்லவும் என்று குடுத்துச் சென்ற முகவரியை ஏதோ நினைவில் எப்போதும் தன் பர்ஸில் வைத்திருந்தான்.
Post a Comment