கொற்றவை - படலம் 4

மறுபுறம் கனிமொழியை சுத்தமாய் மறந்து போய் தன் குடுமபத்துடன் வாழ்ந்திருந்த காந்தனுக்கு இப்போது வயது 52. ஒரே ஒரு மகன் பெயர் கார்த்திகேயன் 19 வயது இளைஞன்.

மனைவி கஸ்பீர் முதன்முதலில் கொண்ட காதல் இன்றுவரை மாறாமல் கணவனை கொண்டாடுபவள். எல்லாம் இன்பமான போதும் காந்தன் மனதில் மட்டும் ஏதோவொரு குறையிருந்தது அது உணர்ந்த மகனும் மனைவியும் பலமுறை கேட்டும் பயனில்லை . இந்த கடிதம் வந்து படித்த போதே மனைவி கஸ்பீரின் மடியில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு விழுகிறார் காந்தன்.

அவசரமாக மருத்துவமனை சேர்த்து சிகிச்சை நடைபெற்ற பின்பு தான் விழுந்துவிட்டதை உணர்ந்த காந்தன். மனைவி மகனை அழைத்து தன் சொத்துக்களையும் தொழிலையும் மனைவியிடம் குடுத்துவிட்டு.

இருவரிடமும் தன் மனதை அரித்துக் கொண்டிருக்கும் விசயத்தை விளக்கமாக கூறத்தொடங்கினார்.
சுமார் 20 வருசம் இருக்கும் நான் தொழில் தொடங்கி கஸ்டபட்டு ஒரு நல்ல நிலைக்கு வந்துட்ட காலம் . கனிமொழினு ஒரு சின்ன பொண்ணு தோராயமா ஒரு 12 வயசிருக்கும் ரொம்ப அறிவா இருப்பா அழகாவும் இருப்பா. அவ மேல எனக்கு ஒரு பாசம் ஆரம்பத்துல உறவுகளே இல்லாம வாழந்துட்டு இருந்த எனக்கு என்ன போலவே இருந்த கனிமொழி மேல ஒருபாசம் அதனால அவளுக்கு தேவையான பணவசதிய செய்ய ஆரம்பிச்சேன் இது கஸ்பீரும் நானும் சந்திக்கிறதுக்கு முன்னால நடந்தது. அப்புறம் நாளடைவுல நாம மதகாசத்துல இருந்து இங்க வந்துட்டோம்.

ஒரு மூணு வருசத்துக்கு முன்னால அவகிட்ட இருந்து எந்த தகவலும் வரலன்னு போய் பாத்தேன் ஆனா அங்க அவ இல்ல போலீஸ் கலக்டர்னு பிரச்சனையாகி காணாம போயிட்டா . அந்த அப்பார்ட்மெண்ட்ல இருக்குறவங்க எல்லாம் அவ செத்துட்டதாவும் ஆவியா அலையிறதாவும் பல கதைகள் சொன்னாங்க ஆனா ஆரம்பத்துல நான் அத நம்பல நானும் பல இடத்துல தேடி அலைஞ்சி விசாரிச்சும் கிடைக்கலன்னு தெரிஞ்சதும் அவள என் மகளா நெனச்சு அவளுக்கான சடங்குகள் எல்லாம் பண்ணிட்டு வந்துட்டேன் . ஆனா கடைசியா அவள மார்க்கெட்ல ராணுவம் வந்து கூட்டிட்டு போனதா எல்லாரும் சொன்னாங்க. போலீஸ் சரி கலக்டர் சரி ராணுவமே ஏன்னுதான் புரியல. இப்படி போய்ட்டுருக்கப்ப காலைல ஒரு கடிதம் வந்தது அதுல சொன்ன விசயம் பாத்தா என்னால தாங்க முடியல என்று அந்த கடிதத்தை தன் மகனிடம் கொடுத்து.

நான் பிழைப்பேன்னு தெரியலடா கார்த்திக் உங்கப்பாவோட கடைசி ஆசையா கேக்குறேன் என்னால முடியலன்னாலும் நீயாவது அவளுக்கு என்ன நடந்துச்சுன்னு கண்டுபிடிக்கனும்டா என்று சத்தியம் வாங்கிக் கொண்டார் அதனாலதான் தொழிலையும் சொத்தயும்உங்கம்மாகி்ட்ட குடுத்துட்டேன் என்று சொல்லி முடித்தவர் இரண்டு நாட்கள் தான் உயிருடன் இருந்தார்.

அவர் இறுதி சடங்குகளை முடித்த கார்த்திகேயன் . அவர் தன்னிடம் தந்த கடிதத்தோடு கிளம்பி மதகாசம் வந்தான் . அவன் மதகாசம் வந்து காலடி வைத்ததும் வீசிய காற்றில் மரத்தில் மலர்ந்திருந்த மலர்கள் தூவி வரவேற்றது இந்த காட்சி இயற்கை அவன் வருகைக்கு காத்திருந்தது போலதும் கொண்டாடுவது போலவும் இருந்தது.

நேராக, அவன் அந்த கடிதத்தை அனுப்பிய நிரஞ்சனை தேடி வந்தவன் விவரங்களை வாங்கிக் கொண்டு அப்பார்ட்மெண்டை நோக்கி சென்றான் அங்கு அந்த 27ம் நம்பர் வீட்டின் முன்புறம் நின்றவன் அங்கு செய்து வைத்திருக்கும் மாலை அலங்காரங்களை கண்டு ஒருநிமிடம் நெஞ்சில் பயம் வந்துபோனது.


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post