கொற்றவை - படலம் 8

முத்துசாமியின் அந்திமச் சடங்குகள் எல்லாம் முடித்து அந்த உடல் எரியும் தீயை பார்த்தபடியே நின்றிருந்தான் கார்த்திகேயன் அவன் ஒவ்வொன்றாய் கோர்த்து வைத்திருந்த  மனச்சிந்தனைகள் எல்லாம் பலப்பல பக்கங்களாக பறந்தன  . அவன் இதுவரை கற்ற நம்பிய பல விசயங்கள் ஒரு கோடாரியின் கூர்மையில் விழுந்த பழங்களாய் பிளந்து பிளந்து அந்த மனநிலை சித்ரவதையாக இருந்தது.  வெளியில் வெறுமையாக முத்துசாமியின் உடல் எரிவதை பார்த்திருந்தாலும் உள்ளே துடியாய் துடித்துக்கொண்டிருந்தான்.

அவன் வெறுமையை கலைக்க தோள் தொட்டு உலுக்கினான் நிரஞ்சன் பேசியபடி அவர்கள் அந்த அப்பார்ட்மெண்ட் வீட்டிற்கு வந்தனர். மலர்கள் மற்றும் நீர் சிந்தியிருந்தது . எப்போதும் இல்லாத திகிலுணர்வை நிரஞ்சனுக்கு அது ஏற்படுத்தியது.

கார்த்தி வாப்பா நாம நம்ம ரூம்க்கு போய்டலாம் என்று போனார்கள். அட நல்ல மனுசன்பா எப்படியெல்லாம் திடீர்னு சாவு வருது பாரு. என்று முகத்தை கழுவித் துடைத்துக்கொண்டே பேசினான் நிரஞ்சன்.

அண்ணா அவர் சாவு உங்களுக்கு வித்தியாசமா தோணல? எனக்கு என்னமோ மர்மமா இருக்கு. . என்று கேட்டான் கார்த்திகேயன்.

அப்படி எல்லாம் எதுவும் இல்ல தம்பி நீ வசதியான வீட்டு பையன் இந்த மாதிரி எல்லாம் பாத்துருக்க மாட்ட. என்றான் நிரஞ்சன்.

அது வேணா நியாயமா இருக்கலாம் அண்ணா ஆனா நான் வரும்போதே அவர் சாவாருன்னு தெரிஞ்சிருக்குறத எப்படி சொல்றது?...

நீ என்ன சொல்ற அவர் சாகப்போறது உனக்கு ஏற்கனவே தெரியுமா?.

ம் தெரியும் அண்ணா. ஆனா நான் நம்பல. 

தெரியும் நம்பலயா? புரியிற மாதிரி சொல்லுப்பா.

கார்த்திகேயன் காலை நிரஞ்சன் சென்றபின் நடந்ததை எல்லாம் விவரித்து சொன்னான்..

என்னது விபூதா வா? அதுவும் வசுமதிக்கு முத்துசாமி சாகப் போறது தெரியுமா?. என்ன தம்பி என்னென்னமோ சொல்ற . வசுமதி ரொம்ப சாதுவான பொண்ணு. என்றான் நிரஞ்சன்.

அது உண்மையானு நீங்களும் என்கூட சாயந்திரம் வந்து பாத்துக்கோங்க .

அந்தி தோன்ற சந்தி சாய்ந்தது கதிரவன். அந்த மாலைவேளை நிரஞ்சனும் கார்த்திகேயனும் . வசுமதியை தேடி அவள் வீட்டிற்கு போனார்கள்.

அவளிடமும் கார்த்திக்கு மூன்று கேள்விகள் தான் இருந்தது. இந்த சடங்குகளில் இந்தளவு ஈடுபாடு நம்பிக்கை வர காரணம் என்ன? எத்தனையோ கோயில்கள் தெய்வங்கள் இருக்கும் போது  கனிமொழியை மட்டும் சிறப்பாய் வணங்க காரணம் என்ன?. அந்த பூக்கள் வந்த மர்மம் மற்றும் விபூதா என்றால் என்ன?.

நம்பிக்கைகள் காரணங்களால் அமைவதில்லை கார்த்திகேயா. அதுபோக விபூதா என்ற வார்த்தையையே உன்னிடம் இருந்துதான் கேள்விப்படுகிறேன். என்றவள் நருக்கென முடித்திட வேறுவழியின்றி நிரஞ்சனும் கார்த்திகேயனும் திரும்ப வர. வரும்வழியில் இவ்வளவு நல்ல பொண்ண போய் சந்தேகபட்டுட்டமே தம்பி. என்றான் நிரஞ்சன்.

அண்ணா நான் பாத்த வசுமதியே இவங்க இல்ல அண்ணா. என்றான் கார்த்தி.

என்னது?.

(தொடரும்)


Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post