ஒருநாள் நானும் இறந்தே போனால் என்செய்வீர்கள்?.
இருஇதழ் தன்னில் சிரிப்பை மறந்து யாரும் அழுவாதீர்கள்
நான் மறித்தபின்னும் என் பிணம்கூட
சிரித்தபடி தான் இருக்கும்
நானே வீசிய உடலை நாற்றம்
நாசிதொடா தொலைவில் நீங்களும்
வீசிவிடுங்கள்
தானாய் வளரும் தன்மை கொண்ட என் உடல்
தானாய் அழியும் தன்மையும் உடையது.
என் சாவைக் கொண்டாடும் குழுவில் நானும் ஒருவனாய் இருப்பேன்
என் சவத்தை சுற்றியுள்ளோர் நகைப்புக்கு நானும் சிரிப்பேன்.
இறந்தாலும் நான் யாரையும் விட்டு விலகிப் போயிருக்க மாட்டேன்
உங்கள் அருகிலும் மனதிலும் தான் இருப்பேன்.
உங்கள் சில்லறைத்தனம் மிகுந்த சிறுபிள்ளைத்தனத்தையும் ரசித்து சிரிப்பேன்.
உங்களை பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் ஆசிர்வதிக்கிறேன் மதிக்கிறேன் மன்னிக்கிறேன் கைதட்டுகிறேன் எப்போதும் போல யாவரையும் நேசிக்கிறேன் காதலிக்கிறேன் நம்புகிறேன் மகிழ்கிறேன் .
என்ன உங்கள் கண்களுக்கு விருந்தாக மாட்டேன் அவ்வளவே
அதுபோல உங்கள் காலிலும் விழுந்து வணங்குகிறேன் நான் மறைந்து போனதும்
ஈசனை முருகனை தமிழை கைவிட்டுவிடாதீர்கள்.
ஆம் எப்போதும் நான்
பிறந்தநாளைக் கொண்டாட காத்திருக்கும் குழந்தை போல
இறந்தநாளையும் கொண்டாட காத்திருக்கிறேன் .
நீங்களும் என் மரணத்தை கொண்டாடுங்கள்
உங்கள் மனதில் எனக்கான அரியணையில் அமர வேறொருவர் வந்தால் அனுமதியுங்கள் .
வாழ்வில் போலவே சாவிற்கு பிறகும் என்னை யாரும் எதுவும் செய்துவிட முடியாது.
மீண்டும் வருவேன் என்று நினையாதீர்கள் பிறவிகள் எனக்கு பிடிக்காதவை.
வாழ்க்கை கொண்டாடுவதற்கு மட்டுமே..
Post a Comment