தானம் தனனம் தனன தனனம் தனன தனனம் - தனானம்.
குன்றக் குடிவாழ் குமரக் குருவே குழந்தை முருகா - நமோஓம்
குன்றாக் கருணைக் ககனம் சிறதே குகனே முருகா - நமோஓம்
மன்றத் தலைவர் மனதிற் கினிய
மழலை முருகா - நமோஓம்
மண்ணில் அடியார் மகிழ துணைசெய் மருதத் தலைவா - நமோஓம்
தென்றல் உலவும் தணிகை உறையும் திருவின் மருகா - நமோஓம்
திங்கள் பிறையை தலையில் சுமந்த
தலைவி குமரா - நமோஓம்
நன்றின் நிறையே நிமல வடிவே நிகரில் திருவே - நமோஓம்
நின்னை பணிவார் நிதமும் உயர
குன்றக் குடிசேர் - பெருமாளே
Post a Comment